சுடச்சுட

    

    தொழிற்பிரிவு பயிற்றாசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 07th May 2017 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவு பயிற்றாசிரியர் பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    சமூகப் பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள 3 வாத்தியக் குழு ஆசிரியர், 3 புத்தகம் கட்டும் பயிற்றாசிரியர்- நிலை 1, 3 தச்சுப் பயிற்றாசிரியர் நிலை -1 போன்ற பணியிடங்களுக்கு பொதுப்பிரிவு, ஆதிதிராவிடர் அருந்ததியர்- முன்னுரிமை உடையவர் விண்ணப்பிக்கலாம்.
    மேலும், ஒரு புத்தகம் கட்டும் பயிற்றாசிரியர்- நிலை 2,  ஒரு தச்சுப் பயிற்றாசிரியர்- நிலை 2  ஆகிய பணியிடங்களுக்கு பொதுப்பிரிவு ( முனனுரிமை உடையவர்) தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
    இத்தொழிற்பிரிவு பயிற்றாசிரியர் பணியிடங்கள் சமூகப்பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களில் கல்வி பயின்ற மற்றும் பயிலும் முன்னாள் மாணவ, மாணவிகளைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட இணையதள முகவரியான  w‌w‌w.‌t‌i‌r‌u​c‌h‌i‌r​a‌p‌p​a‌l‌l‌i.‌n‌ic.‌i‌n அல்லது w‌w‌w.‌s‌o​c‌i​a‌l‌d‌e‌f‌e‌n​c‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய கல்விச் சான்று, வயது, தொழிற்கல்வி மற்றும் இதரச் சான்றுகளுடன் முன்னாள் மாணவ, மாணவிகள் என்பதற்கான சான்றின் ஒளிநகலுடன்  இயக்குநர் அலுவலகம், சமூகப் பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், அபிராமி திரையரங்கு அருகில், சென்னை -600010 என்ற முகவரிக்கு மே 10 ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 044-26426421, 26427022, 0431-2421055.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai