சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டத்தில் வருவாய் தீர்வாய குடிகள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    மருங்காபுரி வட்டத்தில் 1426-ஆம் ஆண்டு பசலிக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) கடந்த 3-ம் தேதி துவரங்குறிச்சி பகுதிக்கும், 4-ம் தேதி வளநாடு பகுதிக்கும், 5-ம் தேதி மருங்காபுரி பகுதிக்கும் நடைபெற்றது. மொத்தம் 301 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, அவற்றில், 106 மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு வழங்கப்பட்டது.
    வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிகள் மாநாடு வெள்ளிக்கிழமை மாலை மருங்காபுரி வட்டம் ஜமாபந்தி அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் து. முத்துவடிவேலு தலைமையில் நடைபெற்றது. இதில், பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், நத்தம் பட்டா, முதியோர் உதவித்தொகை ஆணை மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai