சுடச்சுட

  

  மருத்துவ உயர்கல்வியில் இடஒதுக்கீடு ரத்து: மெழுகுவர்த்தி ஏந்தி வருத்தம் தெரிவித்த மருத்துவர்கள்

  By DIN  |   Published on : 07th May 2017 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு திருச்சியில் மருத்துவர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி வருத்தம் தெரிவித்தனர்.
  இப்போராட்டம் அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
  போராட்டத்திற்கு சங்கத்தின் உறுப்பினர் டாக்டர் சுரேந்திரன் தலைமை வகித்தார். இதில் மாவட்டம் மற்றும் மாநகரில் உள்ள மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
  போராட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் கூறுகையில், இத்தீர்ப்பால் அரசு மருத்துவர்களின் முதுநிலை படிப்பு கேள்விக்குறியாகிவிடும். குறிப்பாக, தமிழகத்தின் கிராமப்புறத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் உயர்கல்வியை படிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவர். இதற்காக தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai