சுடச்சுட

    

    பாஜக ஆட்சியில் நாட்டின் பன்முகத்தன்மை நிராகரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி. ராஜா

    By DIN  |   Published on : 08th May 2017 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக ஆட்சியில் நாட்டின் மொழி, கலாசாரம் உள்ளிட்ட பன்முகத்தன்மை நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா.
    திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியது:
     மோடியின் 3 ஆண்டு கால ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மோடி கொண்டு வந்துள்ள திட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயன் பெற்று வருகின்றன.
    இந்தியா மொழி, கலாசாரம், பண்பாடு, மதம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பன்முகத்தன்மை கொண்ட நாடு. தற்போதைய பாஜக ஆட்சியில் இந்தியாவின் பன்முகத்தன்மை நிராகரிக்கப்பட்டு வருகின்றது. அனைத்து மொழிகளும் சமம்தான். எனவே வட்டார மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட மொழிகளை மட்டும் திணிக்கக்கூடாது. ஆனால் இந்தி, சம்ஸ்கிருதம் மட்டும் திணிக்கப்படும் நிலை உள்ளது. புதிய கல்வித் திட்டத்தில் சம்ஸ்கிருதத்துக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
    குடிமக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மோடி அரசு பலமாக எதிர்க்கவில்லை. இலங்கையில் 2009-ஆம் ஆண்டு லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் எதிர்ப்பை அழுத்தமாக தெரிவிக்கவில்லை. காஷ்மீரில் ஏற்பட்டுள்ள தீவிரவாதிகள் பிரச்னை, பாகிஸ்தான் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் நாடு பெரும் நெருக்கடியில் உள்ளது. அவற்றை எதிர்கொள்வதை விட்டு ஒற்றை மொழி கலாசாரம் திணிக்கப்பட்டு வருகின்றது என்றார் அவர்.அப்போது, மாநிலக்குழு உறுப்பினர் இந்திரஜித், மாநகர் மாவட்ட செயலாளர் சுரேஷ், விவசாயிகள் அணி அயிலை சிவசூரியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai