சுடச்சுட

    

    திருச்சி - சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

    By DIN  |   Published on : 09th May 2017 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி - சென்னை இடையே ஜூன் மாதத்தில் வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது தெற்கு ரயில்வே.
    இதுகுறித்து திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
    திருச்சியிலிருந்து ஜூன் 3, 10, 17, 24-ஆம் தேதிகளில் பிற்பகல் 3.15-க்கு புறப்படும் அதிவேக சிறப்பு ரயில் (எண். 06026) அன்றைய தினம் இரவு 9.10-க்கு சென்னை எழும்பூர் நிலையத்தை சென்றடையும். எதிர்மார்க்கத்தில், சென்னை எழும்பூரிலிருந்து ஜூன் 7 14, 21, 28 தேதிகளில் காலை  9.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண். 06025) பிற்பகல் 3.10-க்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடையும்.
    இந்த ரயில்கள் விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் நிலையங்களிலும், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் ரயில் மட்டும் கூடுதலாக மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai