சுடச்சுட

  

  நதிகள் இணைப்பு: தனிநபர் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 09th May 2017 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நதிகள் இணைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தனி நபர் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், காந்தி பேரவைத் தலைவருமான குமரி அனந்தன்.
  அகில இந்திய தமிழ்ச்சங்கம் சார்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
  தமிழ் வளரவில்லை, வளரவில்லை என்று நாம்  கூறி வருகிறோம். அதற்கு நாம் என்ன செய்தோம் என்பதை முதலில் யோசிக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்களை எழுத வேண்டும் என்று கடை உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும். தமிழ், அழிவின் விளிம்பில் உள்ள மொழிகளில் ஒன்றாக உள்ளது என ஐ.நா. சபை கூறுகிறது. அதனால், தாய்மொழியை காக்கவும், உலக உறவுகளை பலப்படுத்தவும் உலகப் பொதுமொழி வேண்டும் என 1992-இல் இருந்து விடுக்கும் கோரிக்கை இதுவரையிலும் கோரிக்கையாகவே இருக்கிறது. இந்த கோரிக்கை குறித்தும் 40 எம்பிக்களும் தனி நபர் மசோதா கொண்டு வந்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
  நாட்டில் உள்ள தண்ணீரில் 31 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 69 சதவிகித தண்ணீர் கடலில் கலக்கிறது. எனவே வீணாகும் தண்ணீரையும் பயன்படுத்தும் வகையில் கங்கையையும், குமரியையும்  இணைக்க வேண்டும்.
  நாடாளுமன்றத்தில் நதிகள் இணைப்பு தீர்மானத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 எம்.பி.க்களும் நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும். இல்லாவிடில் 40 பேரும் தனி நபர் மசோதாவை கொண்டு வர வேண்டும்.
  பாளையங்கோட்டையில்  மே 21-ஆம் தேதி மதுவிலக்கு கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது என்றார் குமரி அனந்தன்.
  கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவப் ப. நாகராசன் தலைமை வகித்தார். தமிழக புலவர் குழு பொறுப்பான்மை குழுச் செயலாளர் கி.ஆபெ.வி. கதிரேசன், காவேரி கட்டளை வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், சங்க மாவட்டச் செயலாளர் இலக்குமணப் பெருமாள் முன்னிலை வகித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai