சுடச்சுட

    

    ரயில்வே துறையில்  முன்பதிவு மென்பொருளை மேம்படுத்த கோரிக்கை

    By DIN  |   Published on : 09th May 2017 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில்வே துறையில் ஐ.ஆர்.சி.டி.சி முன்பதிவு மென்பொருளில் பணப்பரிமாற்றம் செய்யும் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது.
    இந்திய ரயில்வே துறையில் 142 பிரிமியர் ரயில்கள், சிறப்பு ரயில்கள், வழக்கமான விரைவு ரயில்கள் என சுமார் 3000 ரயில்களுக்கு ஏறத்தாழ 6 லட்சம் முன்பதிவுகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இதற்காக நாடுமுழுவதும் 758 முன்பதிவு மையங்களை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது.
    என்றாலும், சுமார் 55% பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் ஆன்லைன் முன்பதிவையே பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு நிமிடத்துக்கு 14,800 முன்பதிவுகள் வழங்கக்கூடிய செயல்திறன் உடையது. சுமார் 3 லட்சம் பேர் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்யும் வகையில், 10 சர்வர்கள் துணையுடன், ஒரு வினாடிக்கு 3000 விசாரணைகளை சமாளிக்கும் திறன் கொண்டதாக கடந்த ஆண்டு மேம்படுத்தப்பட்டது.
    என்றபோதும், முன்பதிவு செய்த வகையில், பயணச் சீட்டு பெறுவதற்கான இறுதிகட்ட பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து தோல்வியில் முடிவதால் பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அந்தவகையில், 2015-16 ஆம் நிதியாண்டில் ரூ. 83.64 லட்சம் பணப்பரிவர்த்தனைகளும், 2016-17 ஆம் நிதியாண்டில் ரூ. 1.02 கோடி பரிவர்த்தனைகளும் தோல்வியடைந்தன. இது முன்பதிவில் 22 சதவீதமாகும்.  
    ரயில்வேயின் மின்னணு பணப் பெட்டகத்தைக் (வேலட்) கையாள்வது இத்தகைய பணச் சிக்கலுக்கு தீர்வாக இருந்தாலும், பயணச் சீட்டு பெறவதில் ஏற்படும் ஏமாற்றத்தை தவிர்க்க ஐ.ஆர்.சி.டி.சி முன்பதிவு மென்பொருளில் பணப்பரிமாற்றத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என தெற்கு ரயில்வேயின் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai