Enable Javscript for better performance
ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி அருகே ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டிலிருந்து 11 பவுன் நகைகள், 4.5 கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே மல்லியம்பத்து ஊராட்சி செங்கதிர்சோலை கூட்டுறவு நகரைச் சேர்ந்தவர் கண்ணப்பன் (62). ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி. இவர் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மனைவியுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததாம். வீட்டினுள் சென்று பார்த்த போது, பீரோவிலிருந்த 11 பவுன் நகைகள், 4.5 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
    இதுகுறித்து கண்ணப்பன் அளித்த புகாரின் பேரில், சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, கைரேகை நிபுணர்களின் உதவியுடன் திருட்டில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai