சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது சட்டவிரோதம் : தொல். திருமாவளவன்

    By DIN  |   Published on : 12th May 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது சட்டவிரோதம் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
    திருச்சியில் வியாழக்கிழமை அவர் மேலும் கூறியது: நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் நீட் தேர்வு எளிதாக இருந்துள்ளது. இதன்மூலம் மருத்துவ தேர்வு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக நடைபெறவில்லை என்பது அம்பலமாகி உள்ளது.
    தமிழகத்திலிருந்து தொழில் நிறுவனங்கள் வெளியேறுவதற்கு, தமிழக அரசியல் தலைவர்கள் தொழிலதிபர்களுக்கு நெருக்கடி கொடுப்பதே காரணம். இது தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு. அதேபோல், மத்திய அரசின் தலையீட்டால் தமிழக அரசு சுதந்திரமாக முடிவு எடுக்காததால்தான் தமிழகத்தில் தொழில் தொடங்க தொழிலதிபர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
    இலங்கை செல்லும் பிரதமர் மோடி, இந்தியா அளித்த நிதியுதவி இலங்கைத் தமிழர்களுக்கு முறையாக சென்றடைந்ததா என ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பது சட்ட விரோதம். அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் வரை தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது என்றார் திருமாவளவன்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai