சுடச்சுட

    

    திருச்சி அருகே மனைவியை ஈட்டியால் குத்திய கணவனைப் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
     திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை குங்குமபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனியாண்டி (35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மீனா (30). இருவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.  இந்நிலையில், குடிப்பழக்கமுள்ள பழனியாண்டி அடிக்கடி மனைவி மீனாவின் நடத்தையில் சந்தேகித்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதே போல, சனிக்கிழமை நடந்த தகராறில் ஆத்திரமடைந்த மீனா, எதிர்புறத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றதாகவும், இதையறிந்த பழனியாண்டி தனது வீட்டிற்கு வருமாறு அழைத்ததற்கு மீனா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பழனியாண்டி அருகில் கிடந்த ஈட்டியால் மீனாவின் வயிற்றில் குத்தியதாகக் கூறப்படுகிறது.காயமடைந்த மீனாவை மீட்டு உறவினர்கள் சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உடலில் குத்தப்பட்ட ஈட்டியை எடுக்க முடியாததால், தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    இதுகுறித்து மீனா அளித்த புகாரின் பேரில், துவாக்குடி போலீஸார் வழக்கு பதிந்து பழனியாண்டியைக் கைது செய்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai