சுடச்சுட

  

  ஏடிஎம் ரகசிய எண்ணை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது : மாநகர காவல் ஆணையர்

  By DIN  |   Published on : 14th May 2017 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெளிநபர்கள் யார் கேட்டாலும் ஏடிஎம் ரகசிய எண்ணைத் தெரிவிக்கக் கூடாது என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ. அருண் அறிவுறுத்தியுள்ளார்.
  திருச்சி மாநகர காவல் நிலையங்களில், வங்கியில் இருந்து வங்கி மேலாளர் அல்லது வங்கி அலுவலர்கள் பேசுவது போல பேசி, ஏடிஎம் அட்டையின் ரகசிய எண்ணை (பின் நம்பர்) தெரிந்துகொண்டு அதிலிருந்து உரிமையாளர்களுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்துக்கொள்வதாகவும், அப்பணத்தை மீட்டுத் தருமாறும் அதிகளவிலான புகார்கள் வருகின்றன.
  இதுபோன்ற திருட்டுக்களைத் தடுக்க, வங்கி மேலாளர் அல்லது வங்கி அலுவலர்கள் என்றோ தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தொலைபேசி மூலமாகவோ, நேரிலோ அல்லது எவ்வகையிலும் எக்காரணத்தைக் கூறி கேட்டாலும் வங்கியில் வழங்கப்பட்ட ரகசிய எண் மற்றும் ஏடிஎம் கார்டு எண்களைத் தெரிவிக்கக் கூடாது.
  ஏடிஎம் மையங்களில் ரகசிய எண்ணை உபயோகப்படுத்தும் போது மற்ற நபர்களுக்கு தெரியாத வகையில் செயல்பட வேண்டும். உதவி செய்வதாக கூறி பணம் எடுத்துத்தர முன்வரும் அறிமுகமில்லாத நபர்களிடம் ஏடிஎம் ரகசிய எண்ணைத் தெரிவிக்க வேண்டாம்.
  அறிமுகமில்லாத நபர்களிடம் கொடுக்கப்படும் தகவல்கள் மூலம் தங்களின் அனுமதியில்லாமல் ஏடிஎம்-லிருந்து பணத்தை எடுக்க வாய்ப்பு உள்ளது.
  தங்களின் ஏடிஎம் ரகசிய எண்களை ஏடிஎம் அட்டையின் பின்பக்கமோ அல்லது துண்டுச் சீட்டிலோ எழுதி உள்ளே வைத்திருக்கக் கூடாது என மாநகர காவல் ஆணையர் ஏ. அருண் அறிவுறுத்தியுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai