சுடச்சுட

  

  உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசியத் தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
  திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்டச்செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
  உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்க சட்டப்படியான நடவடிக்கையை சம்மேளனத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.
  பகுதிநேர ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும். ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும்.
  பிஎஸ்என்எல் முத்திரையுடன் கூடிய அடையாள அட்டையை அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. விதிகளின்படி பகுதி நேர ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அனைத்து ஊர்களில் மருத்துவ ஈட்டுறுதித்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
  நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. முத்து தலைமை வகித்தார். மாநிலச் செயல் தலைவர் வி.மாரி தொடக்க உரையும், மாநிலச் செயலர் எஸ்.ஆனந்தன் சிறப்புரையும் வழங்கினர்.
  தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர் பி. சுந்தரம், செயலர் எஸ். பழனியப்பன், இந்திய பிஎஸ்என்எல்
  ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலர்
  எம்.காமராஜ்,தேசியத் தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின்  மாநிலத் துணைச் செயலர் வி. பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலர் மில்டன், பொருளாளர் பி. ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai