Enable Javscript for better performance
முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்டக் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கான மாணவச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து கூட்டுறவு மேலாண்மை நிலையம் சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேரக் கூட்டுறவுப் பட்டயப்பயிற்சி ஜூலை 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
    இப்படிப்புக்கான விண்ணப்பம் மே 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 12 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
    பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்ற, 2017, ஜூன் 1 ஆம் தேதி 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் பயிற்சியில் சேரலாம். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு அரசு கல்வி உதவித்தொகை பெற்றுத் தரப்படும்.
    பயிற்சியில சேர விரும்புவோர் திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்துக்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் வந்து ரூ.100 செலுத்தி, விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். மூன்று சான்றிதழுக்குரியப் பயிற்சிகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
    மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையம், 1 பழைய குட்ஷெட் சாலை, அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகம், சிங்காரத்தோப்பு, திருச்சி 2 என்ற முகவரியிலோ அல்லது 0431-2715748, 9994635297 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai