சுடச்சுட

  

  காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை பகுதியில் ரயில் மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்ட விவசாய சங்கத்தைத் சேர்ந்த 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  ஒற்றை தீர்ப்பாயத்தை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், வறுமை மற்றும் வேளாண் பயிர் பாதிப்பு காரணமாக உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மணல் குவாரிகளை மூடி மணல் அள்ள தடைவிதிக்க வேண்டும், நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
  அதன் ஒருபகுதியாக தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மா.ப. சின்னத்துரை தலைமையில் சுமார் 70 பேர், திங்கள்கிழமை காலை பேட்டைவாய்த்தலை ரயில் நிலையம் அருகே ரயில் மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.
  ஈரோட்டிலிருந்து திருச்சிக்கு வந்த பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்தனர்.
  பேட்டைவாய்த்தலை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்தனர். இதனால் ரயில் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. கைதானவர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai