சுடச்சுட

  

  ரயில் மறியலில் ஈடுபட முயற்சி: காவிரி உரிமை மீட்பு குழுவினர் 126 பேர் கைது

  By DIN  |   Published on : 16th May 2017 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர், நீடாமங்கலத்தில் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காவிரி மீட்புக் குழுவினர் 126 பேரை போலீஸார் கைது செய்தனர். காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்னைக்கு தீர்வுகாண ஒற்றைத் தீர்ப்பாயச் சட்ட முன்வடிவை திரும்பப் பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். மேகேதாட்டில் கர்நாடகம் புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகள் கூட்டுறவு மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரி டெல்டா பகுதியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவாரூர் ரயில் நிலையத்தில் கூடிய காவிரி உரிமை மீட்புக் குழுவினர், எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் வரை செல்லும் விரைவு ரயிலை மறிக்க முஹயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் காவிரி உரிமை மீட்புக் குழு நகரப் பொறுப்பாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட 51 பேரை கைது செய்தனர்.

  காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் டாக்டர் பாரதிசெல்வன் தலைமையில் 75 பேர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டப்படி, நீடாமங்கலம் ரயில் நிலையம் நோக்கி வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் காவிரி உரிமை மீட்புக் குழுவினரை கைது செய்தனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக அனைத்து ரயில்களும் தாமதத்துடன் சென்றன. இதனால் ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai