சுடச்சுட

  

  திருச்சியில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரெளடியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
   சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 9-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த சந்திரன் மகன் தனசேகரன் (33). இவர் மீது சென்னை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் திருச்சி மாநகரில் சுற்றி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், அரியமங்கலம் போலீஸார் வழிப்பறி வழக்கு ஒன்றில் தனசேகரனைக் கைது செய்து விசாரித்தனர்.
  விசாரணையில், அவர் மீது 3 கொலை, 11 கொலை முயற்சி, 4 கொள்ளை, 18 அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
  தொடர்ந்து இவர் பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அரியமங்கலம் காவல் ஆய்வாளரின் பரிந்துரையின் படி, திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ. அருண், தனசேகரனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai