சுடச்சுட

  

  தயார் நிலையில் 16 ஆயிரம் மரக்கன்றுகள் பருவமழை தொடங்கியதும் நட வனத்துறை திட்டம்

  By DIN  |   Published on : 17th May 2017 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பருவமழை தொடங்கியதும் நடுவதற்காக திருச்சி மாவட்ட வனத்துறையில் 16 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.
  தமிழகத்தில் மழை வளத்தை பெருக்கவும், மண் அரிப்பைத் தடுக்கும் வகையிலும் ஆண்டுதோறும் மாபெரும் மரக்கன்று நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் நிகழாண்டு லட்சக்கணக்கில் மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
  இதற்காக திருச்சி மாவட்டத்தில் 16,129 மரக்கன்றுகளுக்கான விதைகள்  நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது இவை நடுவதற்கு தயார் நிலையில் உள்ளன.
  இந்த மரக்கன்றுகள் அனைத்தும் மாவட்ட திட்ட அலுவலரின் வழியாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்கள் மூலம் திருச்சி மாவட்டத்தில் நடப்பட உள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட வன அலுவலர் சதீஷ் கூறியது: திருச்சி மாவட்டத்தில் 2017-18-ஆம் ஆண்டில் மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் நடுவதற்காக வேம்பு, புளியங்கன்று, புங்கன், சிசு, ஆவி ஆகிய 5 வகையான மரக்கன்றுகள் வரதராஜபுரம்
  வனத்துறை
  நர்சரியில் விதைகள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோல், 16,129 மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு, நடுவதற்கு தயார் நிலையில் உள்ளன. இவையனைத்தும் பருவமழை தொடங்கியதும், மாவட்ட திட்ட அலுவலரிடம் வழங்கப்படும். அவர், அவற்றை 100 நாள் திட்டப் பணியாளர்கள் மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ள ஆறு, ஏரி, குளம், குட்டைகளின் கரைகளில் நடுவர்.
  இதன் மூலம் நீர்நிலைகளின் கரை பலப்படுத்தப்பட்டு, மண் அரிப்பு தடுக்கப்படும். மழை வளம் பெருகும் என்றார் அவர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai