சுடச்சுட

  

  ஸ்ரீரங்கத்தில் தீவிபத்து: சிக்கி மூதாட்டி பலி; 4 வீடுகள் சேதம்

  By DIN  |   Published on : 17th May 2017 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி ஸ்ரீரங்கத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார். 4 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
  ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கீழத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது வீட்டின் மாடியில் 4 குடிசை வீடுகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார்.இதில் ஒரு வீட்டில் பத்மாவதியும் (76), மற்றொரு வீட்டில் ஆட்டோ ஓட்டுநர் லெட்சுமணனும், இன்னொரு வீட்டில் தட்டு ரிக்ஷா தொழிலாளி முருகதாஸ் ஆகிய மூவரும் குடியிருந்து வந்தனர்.
  செவ்வாய்க்கிழமை காலை பத்மாவதியை தவிர, மற்ற இரண்டு குடும்பத்தினரும் வெளியே சென்று விட்டனர். இந்நிலையில், திடீரென்று ஒரு குடிசை வீட்டில் தீப்பற்றியது. இது காற்றில் அருகிலிருந்து மற்ற வீடுகளுக்கும் பரவியது. முருகதாஸ் வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால், அப்பகுதியிலிருந்த சிவபாலன் என்பவரின் குடிசை வீட்டிலும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர், 4 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  இதைத் தொடர்ந்து மாடிக்கு சென்று பார்த்தபோது, பத்மாவதி தீயில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் நான்கு வீடுகள் எரிந்ததால், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக தெரிகிறது.  தீ விபத்துக்கான காரணம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் ரமேஷ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

   

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai