சுடச்சுட

  

  தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திலிருந்து மாயமான துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு

  By DIN  |   Published on : 21st May 2017 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திலிருந்து மாயமான துப்பாக்கிகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன.
  திருச்சி பெரியார் நகர் 3-வது தெருவில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனம் தனியார் வங்கி ஏடிஎம்களுக்கு பாதுகாப்புடன் பணம் எடுத்துச் சென்று, நிரப்பும் பணியை செய்து வருகிறது. இதில் 18 பாதுகாவலர்கள் வேலை செய்து வந்துள்ளனர். பாதுகாப்புக்காக 18 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி இரவு இந்நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த 18 துப்பாக்கிகளில் 2 துப்பாக்கிகள் (பெரிது 1, சிறிது 1) காணாமல் போனதாக, நிறுவனத்தின் மேலாளர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
  திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ. அருண் உத்தரவுப்படி, தனிப்படை அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
  இந்நிலையில் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஸ்ரீரங்கம் பெரியார் நகர் முருகன்தோப்பு பின்புறம் உள்ள வாய்க்காலில் இருந்து 2 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. அவை செக்யூரிட்டி நிறுவனத்தில் காணாமல் போன 2 துப்பாக்கிகள்தான் என்று உறுதி செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தனிப்படையினர் தேடிவருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai