சுடச்சுட

    

    திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் முனீஸ்வரன் கோயில் தெருவில் வசிப்பவர் முகமது உசேன் மகன் அகமது (50). இவர் கடந்த 13-ஆம் தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்காக குடும்பத்துடன் திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டு, 16 ஆம் தேதி இரவு வீட்டுக்கு வந்துள்ளார்.
    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை, ரூ. 30,000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
    இதுகுறித்து அகமது அளித்த புகாரின் பேரில், பாலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து, அகமது வீட்டிற்கு கீழ்வீட்டில் வசித்து வந்த சுப்ரமணியன் மகன் சக்தீஸ்வரன் (எ) சக்தியை (26) பிடித்து விசாரித்தனர். இதில், அகமது வீட்டில் திருடியதை சக்தி ஒப்புக்கொண்டார்.
    இதையடுத்து, அவரிடமிருந்து ஒரு பவுன் நகைகள், ரூ. 30,000 ரொக்கத்தை கைப்பற்றிய போலீஸார், அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai