சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள மாலைகட்டுபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி வேரன் (எ) செவந்திகவுண்டர். இவரது 4 மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், ஐந்தாவது மகள் சித்ரா (20) செவந்திகவுண்டர் இறப்பிற்கு பின் தாயுடன் வசித்து வருகிறார். இவர்கள் கூலித்தொழிலாளர்கள்.
    கடந்த 12 ஆம் தேதி இரவு சித்ரா தனது வீட்டில் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் சித்ராவை காரில் கடத்திச்சென்று கன்னிப்பட்டியில் உள்ள முருகன் (எ) சின்னுராசு (45) வீட்டில் விட்டனராம்.
    அங்கு சின்னுராசு மகன் சிவகுமார் (20) சித்ராவுக்கு கட்டாயப்படுத்தி தாலிகட்டினாராம். அதோடு, சிவகுமார், சித்ராவிடம் வல்லுறவு கொண்டதாகவும், அங்கிருந்து தப்பிவந்த சித்ரா தன் தாயிடம் தெரிவித்துள்ளார்.
    இந்த சம்பவங்களுக்கு சிவகுமாரின் தாய் சின்னப்பொண்ணு (45), அண்ணன் செல்வம் (22) ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக சித்ரா காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
    காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் சந்தானலூயிஸ் ஆகியோர் விசாரணை நடத்தி, ஆள் கடத்தல், கட்டாயப்படுத்தி திருமணம், வல்லுறவு ஆகிய பிரிவுகளின் கீழ் சிவகுமார் மற்றும் அவரது தந்தை முருகன் (எ) சின்னராசு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனர்.
    மேலும், சிவகுமாரின் தாய் சின்னப்பொண்ணு, அண்ணன் செல்வம் ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai