சுடச்சுட

  

  திருச்சி மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண், சவுடு, களிமண் எடுக்க 1109 விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்தார்.
  திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நீர்நிலைகளில் வண்டல் மண் உள்ளிட்ட மண்களை இலவசமாக எடுத்துக் கொள்வதற்காக சனிக்கிழமை நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் பங்கேற்று, விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கி மேலும் அவர் பேசியது:
  விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நீர்நிலைகளில் விவசாயப் பயன்பாட்டுக்கு வண்டல்மண்ணை எளிமையான நிபந்தனைகளுக்கு உள்பட்டு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  வீட்டு உபயோகம், விவசாயத் தேவைகளுக்கும், மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களுடையத் தொழிலுக்கும் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். ஏரி மற்றும் குளங்களில் உள்ள மண்ணை எடுப்பதால் நீர் கொள்ளளவு அதிகரிப்பதுடன் அதிக நாள் நீர் இருப்பதால் நிலத்தடிநீர் உயருவதற்கும் வழிவகை செய்யும்.
  வண்டல்மண் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் மே 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சனிக்கிழமை உத்தரவு பெற்ற விவசாயிகள் 20 நாள்களுக்கு மண்ணை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்டத்தில் 1109 விவசாயிகளுக்கு அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.
  நிகழ்வில், கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதிமணி, தனித் துணை ஆட்சியர் (முத்திரை) ஞானசேகர், வட்டாட்சியர்கள் திருவெறும்பூர் சோபா, ஸ்ரீரங்கம் சண்முக ராஜேசுவரன், மண்ணச்சநல்லூர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai