சுடச்சுட

    

    காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ரயில் மறியல்: 46 பேர் கைது

    By DIN  |   Published on : 22nd May 2017 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரிப் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர்ந்து மூன்றாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 46 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    காவிரி தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு ஒற்றைத் தீர்ப்பாயச் சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும்.
    மேகேதாட்டில் கர்நாடக அரசுப் புதிய அணைக் கட்டுவதைத் தடுக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மே 15-ஆம் தேதி தொடங்கினர்.
    தொடர்ந்து நிறைவு நாளாக ஞாயிற்றுக்கிழமை, திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ரயில் நிலையத்தில் திரண்ட விவசாயிகள் திருநெல்வேலி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலை பிற்பகல் 1 மணி முதல் 30 நிமிஷங்கள் மறித்து முழக்கங்கள் எழுப்பினர்.
    இதில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமையில், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் திருச்சி மாநநகர செயலாளர் கவித்துவன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த முகிலன், 7 பெண்கள் உள்பட 46 பேரை போலீஸார் கைது செய்தனர். மாலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai