சுடச்சுட

    

    ஜி.எஸ்.டி. வரியால் வணிகர்கள்,  பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்: வணிகர்கள் சங்கத் தலைவர் பேட்டி

    By DIN  |   Published on : 22nd May 2017 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் ஜ.எஸ்.டி. வரி விதிப்பால் வணிகர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். இதனால் அரசுக்கு வருமானம் அதிகரிக்காது என்றார் தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன்.
    திருச்சியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
    வரும் ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது. இது வணிகர்களுக்கு முற்றிலும் எதிரான செயல்பாடு. இதனால் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்பதெல்லாம் பொய்யான பிரசாரம்.
    வாட் வரியை அறிமுகம் செய்தபோதும், அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் எனத் தெரிவித்தனர். ஆனால் விலை உயர்வு அதிகரிப்பு காரணமாகத்தான் வருவாய் அதிகரித்ததே தவிர வாட் வரியால் அல்ல. அதுபோலத்தான் ஜிஎஸ்டி வரியும். இதனால் வணிகர்களுக்கோ, பொதுமக்களுக்கோ, அரசுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை. உலக பொருளாதாரக்கொள்கை, அன்னிய முதலீடுகள், உலக வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசுக் கொள்கைகளால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவை குறித்து அரசியல் கட்சிகள் அனைத்துமே மத்திய அரசிடம் எடுத்துக்கூறுவதில் தயக்கம் காட்டுகின்றன. இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழ்நாடு வணிகர்கள் சங்கப் பேரவை. விழிப்புணர்வு மூலம் புரட்சி ஏற்படுவது ஒன்றுதான் தீர்வு என்றார் அவர்.
    பேட்டியின்போது, தேவராஜன், ராம்குமார், சரவணன், போஸ்செல்வகுமார், சிவசக்தி ராமநாதன் உள்ளிட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai