Enable Javscript for better performance
திருச்சியில் விமானப்படை ஆள் சேர்ப்பு முகாம்: 350-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு உடல்தகுதி தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் விமானப்படை ஆள் சேர்ப்பு முகாம்: 350-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு உடல்தகுதி தேர்வு

    By DIN  |   Published on : 22nd May 2017 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விமானப்படை ஆள் சேர்ப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை 350-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடைபெற்றது.
    திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை முதல் இம்முகாம் நடைபெற்று வருகிறது. முதல் நாள் தேர்வில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 3,500 இளைஞர்கள் பங்கேற்றனர்.
    இவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் 350-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடுத்தக்கட்டமாக உடல்தகுதித் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உடல்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் இளைஞர்களின் ஓடும் திறன், உடல் திறன் சோதனைகள் நடைபெற்றது. இதில் 182 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அடுத்தகட்டமாக குழு விவாதத் திறன், உளவியல் சோதனைகள் நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் விமானப் படைக்கு தேர்வு செய்யப்படுவர் என விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து 22, 23 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், பெரம்பலூர், தருமபுரி, கோவை, காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, வேலூர், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, அரியலூர், நீலகிரி ஆகிய 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், மே 20-ஆம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாதவர்களும் பங்கேற்கலாம்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai