சுடச்சுட

  

  வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.11.50 லட்சம் தங்கம், மின்னணு சாதனங்கள் பறிமுதல்

  By DIN  |   Published on : 22nd May 2017 05:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 11.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் மின்னணு சாதனங்களை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
  திருச்சி விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்காவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் விமானப் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த பிருந்தா என்ற பெண் தனது உள்ளாடைகளுக்குள் மறைத்து ரூ. 6.75 லட்சம் மதிப்புள்ள 225 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
  அதேபோல சனிக்கிழமை மலேசியாவிலிருந்து வந்த விமானங்களில் வந்த பயணிகளிடம் நடைபெற்ற சோதனையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த குமரேசன் என்ற பயணி, தனது பேண்ட் டிக்கெட் பாக்கெட்டிற்குள் மறைத்து ரூ. 2.30 லட்சம் மதிப்புள்ள 80 கிராம் தங்கக் கட்டிகளை மறைத்து கடத்தி வந்துள்ளார். அதேபோல மற்றொரு பயணி திருச்சியைச் சேர்ந்த பிரேம்நசீர் என்பவர், ரூ. 2.45 லட்சம் மதிப்புள்ள ரிமோட் மூலம் பறந்து படம்பிடிக்கும் மின்னணு சாதனங்கள் இரண்டை உரிய அனுமதியின்றி கொண்டு வந்தார். இவை அனைத்தையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai