சுடச்சுட

  

  ஆட்சிமொழி அமலாக்கத்தில் முன்னணி பெற்று விளங்கியமைக்காக திருச்சி பெல் நிறுவனத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது.
  ஆட்சிமொழி அமலாக்கக்க் கொள்கைகளுக்கான நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் பெல் நிறுவனப் பிரிவுகளுக்கு கேடயம் ஆண்டுதோறும் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தால் வழங்கப்படுகிறது. அதன்படி, பெல் நிறுவனத்தின் திருச்சி பிரிவு ஆட்சிமொழி அமலாக்கக் கொள்கைகளுக்கான நடவடிக்கைகளில் சிறப்பாக
  செயல்பட்டமைக்காக பெல் பெரிய பிரிவுகளுக்கு முதல் இடத்தை பெற்றமைக்காக கேடயம் வழங்கப்பட்டுள்ளது.
  இது 2015-16 ஆம் ஆண்டுக்குரியது.
  அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பெல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் அதுல் சோப்தியிடம் திருச்சி பெல், திருமயம் மின்னாலைக் குழாய்கள் பிரிவு, சென்னை குழாய்கள் மையத்தின் செயல் இயக்குநர் ஆர். ராஜா மனோகர், ஆட்சிமொழி அலுவலர் கதிர்குமார் மிஸ்ரா ஆகியோர் கேடயத்தை பெற்றுக் கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai