சுடச்சுட

  

  கும்பகோணம் அருகேயுள்ள முள்ளங்குடி மதகுசாலை பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். தொழிலாளி. இவருக்கு சுமதி (37) என்ற மனைவியும், கீதா (25), அனு(20) என்ற இரண்டு மகள்களும், பிரவீண் (17) என்ற மகனும் உள்ளனர். பிரவீணுடன் படிக்கும் மாணவர் ஒருவன், "பிரவீண் பிளஸ் 1 வகுப்பில் தோல்வியடைந்துவிட்டான்' என்று விளையாட்டுக்கு பொய் கூறியுள்ளான்.
  இதை நம்பி மனமுடைந்த பிரவீண், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை திங்கள்கிழமை குடித்தார். இதனை பார்த்த தாய் சுமதி மற்றும் சகோதரி அனு ஆகியோர் பிரவீன் மீது கொண்டிருந்த பாசத்தால் மீதமுள்ள விஷத்தை குடித்தனர்.
  தகவலறிந்த வைத்தியநாதன், விஷமருந்திய மூன்று பேரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai