சுடச்சுட

  

  கீரனூரில் கைது செய்யப்பட்ட தம்பதியின் திருச்சி வீட்டிலிருந்து ரூ. 5 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

  By DIN  |   Published on : 23rd May 2017 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கள்ளநோட்டைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்க முயன்றதாக கீரனூரில் கைது செய்யப்பட்ட தம்பதியின் திருச்சி வீட்டிலிருந்து சுமார் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
  திருச்சி பாலக்கரை என்.எம். தெருவைச் சேர்ந்த அப்துல்சுக்கூர் (35), இவரது மனைவி அசினாபேகம் (32). இவர்கள் கீரனூர் கடைவீதியில் உள்ள ஓர் பல்பொருள் அங்காடியில் பல ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். தொடர்ந்து, புதுக்கோட்டை வரும் வழியில் குளத்தூரில் உள்ள ஒரு மளிகைக் கடையிலும் பொருள்களை வாங்கிக்கொண்டு ரொக்கப் பணத்தைக் கொடுத்துள்ளனர்.
  அவர்கள் கொடுத்த பணம் போலியானது என்பதை அறிந்த கடை உரிமையாளர்கள் கீரனூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் கீரனூர் போலீஸார், அப்துல்சுக்கூர், அசினாபேகம் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ. 19,900 ரொக்கத்தையும், அவர்கள் பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்து விசாரித்தனர்.
  விசாரணையில், திருச்சி பாலக்கரையில் உள்ள அவர்களது வீட்டில் கள்ள நோட்டுகள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
  இதன் பேரில், கீரனூர் டிஎஸ்பி பாலகுரு தலைமையிலான போலீஸார், திருச்சி பாலக்கரை என்.எம். தெரு பகுதியில் உள்ள அப்துல்சுக்கூரின் வீட்டில் திங்கள்கிழமை பிற்பகல் சோதனையிட்டனர். சோதனையில், சுமார்
  ரூ. 5 லட்சம் மதிப்புள்ள போலி நோட்டுகள் அடங்கிய மூட்டை, கலர் ஜெராக்ஸ் எடுக்கும் இயந்திரம், நோட்டின் மையப்பகுதியில் வைக்கப்படும் பச்சை நிற ஸ்டிக்கர்கள், பேப்பர் கட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
  இதுகுறித்து டிஎஸ்பி பாலகுரு கூறுகையில், அப்துல்சக்கூர் - அசினாபேகம் தம்பதியினர் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலியான ரூ.500 மதிப்புள்ள நோட்டுகளை பயன்படுத்தி கீரனூர் பகுதியில் பொருள்கள் வாங்கியுள்ளனர். பாலக்கரையில் உள்ள இத்தம்பதியின் வீட்டிலிருந்து கலர் ஜெராக்ஸ் அடிக்கப்பட்ட போலியான ரூ. 5 லட்சம் மதிப்பிலான ரூ. 2,000, ரூ. 500, ரூ. 100 நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.
  சுதந்திரப் போராட்ட தியாகியின் மகன்
  கள்ளநோட்டு தயாரித்த அப்துல் சுக்கூரின் தந்தை சையது முகம்மது சுதந்திரப் போராட்டத் தியாகி ஆவார். சையது முகம்மது 5 மகன்கள் உள்ளனர். இதில் கடைசி மகன்தான் அப்துல்சக்கூர். திருச்சி பாலக்கரை வீட்டில் சையது முகம்மது கீழ்தளத்தில் குடியிருக்க, தம்பதியினர் முதல் தளத்திலும், இரண்டாவது தளத்தில் நோட்டுகளை அச்சடித்தும் வந்துள்ளனர் என கீரனூர் போலீஸார் தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai