Enable Javscript for better performance
திருச்சியில் முதல் முறையாக அகதிகளுக்கான பயோ-மெட்ரிக் பதிவு, ஆவணங்கள் சரிபார்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் முதல் முறையாக அகதிகளுக்கான பயோ-மெட்ரிக் பதிவு, ஆவணங்கள் சரிபார்ப்பு முகாம்

    By DIN  |   Published on : 23rd May 2017 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை அதிகளை மறுவாழ்வுக்காக தாயகம் அனுப்பும் வகையில், பயோமெட்ரிக் பதிவு மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கும் முகாம் திருச்சியில் திங்கள்கிழமை முதல்முதலாக நடைபெற்றது.
    இலங்கை நடைபெற்ற உள்நாட்டுப் போரால் அகதிகளாக இந்தியா வந்த லட்சக்கணக்கானோர், தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர்.
    இதுதவிர பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களுடன் முறையாக விசா பெற்று வந்தவர்களும் முகாம் இல்லாத வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.
    இவ்வாறு வசித்து வருவோர் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஹை-கமிஷனர் ஆணையம் (மசஏஇத ) செய்து வருகிறது. அந்த வகையில் ஏராளமானோர் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
    இவ்வாறு தாயகம் செல்லும் அகதிகள் குறித்து அவரவர் விருப்ப மனுக்களை அளித்தப் பின்னர், அதுகுறித்த தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு, பயோ-மெட்ரிக் பதிவு உள்ளிட்டவை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் நடைபெறுவது வழக்கம்.
    தற்போது, அதிகமானோர் இலங்கை செல்ல விண்ணப்பித்துள்ள நிலையில் முதல்முறையாக இந்த பயோ-மெட்ரிக் பதிவு முகாம் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அகதிகளுக்கான தனி வட்டாட்சியர் எஸ். நடராஜன் தலைமையிலான குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையக பணியாளர்களுடன் இணைந்து ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் கண்விழிப் படலம், கைரேகைகள் பதிவு, புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
    இதுகுறித்து தனி வட்டாட்சியர் எஸ். நடராஜன் கூறியது:
    திங்கள்கிழமை மேற்கொண்ட பதிவில் வெளியிடங்களில் வசித்து வரும் 9 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தங்களது பயோ -மெட்ரிக் பதிவுகளை மேற்கொண்டனர். இந்த பதிவுகளை அகதிகளுக்கான ஹை கமிஷனர் அலுவலக அதிகாரிகள் பரிசீலித்த பின்னர் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பர். திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் குடும்பத்தினர் அகதிகள் முகாம்களில் அல்லாது வெளியிடங்களில் வசித்து வருகின்றனர், இவர்களில் ஏராளமானோர் தாயகம் செல்ல விரும்புவதால் இதுபோன்ற பதிவு நிகழ்வுகள் திருச்சியில் மேற்கொள்ளப்படுகின்றன, தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் இந்த முகாம் நடைபெறுகிறது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai