Enable Javscript for better performance
திருச்சியில் விமானப் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம்3-ஆவது நாளில் 2,500 இளைஞர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் விமானப் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம்3-ஆவது நாளில் 2,500 இளைஞர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 23rd May 2017 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய விமானப் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற தேர்வில் சுமார் 2,500 இளைஞர்கள் பங்கேற்றனர்.
    முதல் நாள் தேர்வில் பங்கேற்ற 17 மாவட்டங்களைச் சேர்ந்த 3,500 இளைஞர்களில், தேர்வு செய்யப்பட்ட 350-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உடல்தகுதி தேர்வில் பங்கேற்றனர். இதில் 182 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அடுத்தகட்டமாக உளவியல் தொடர்பான நேர்முகத் தேர்வும், குழு கலந்துரையாடல் ஆகியவை நடத்தப்பட உள்ளன.
    3-ஆவது நாளில்..: திங்கள்கிழமை மூன்றாவது நாளாக நடைபெற்ற ஆள் சேர்ப்பு முகாமில், சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், பெரம்பலூர், தருமபுரி, கோவை, காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, வேலூர், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, அரியலூர், நீலகிரி ஆகிய 17 மாவட்டங்களைச் சேர்ந்தோர், மே 20-ஆம் தேதி கலந்து கொள்ள முடியாதவர்கள் என மொத்தம் 2,500 இளைஞர்கள் பங்கேற்றனர்.
    கூட்டத்தை கட்டுப்படுத்திய போலீஸார்...: பங்கேற்க வந்த இளைஞர்கள், திருச்சி அண்ணா விளையாட்டரங்க வாயிலில் போலீஸாரால் அமைக்கப்பட்டிருந்த 6 பெட்டிகள் போன்ற தடுப்புகளுக்குள் அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து தலா 20 நபர்களாக அழைத்து உயரத்தை அளந்து, தேர்வானவர்கள் தனி வரிசையில் அமர வைக்கப்பட்டனர். அதன் பின், அவர்களது சான்றிதழ்கள் விமானப் படை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பின், அவர்களது கையில் முத்திரையிட்டப்பட்டது.
    இதையடுத்து தேர்வர்களுக்கு, 50 மதிப்பெண்கள் கொண்ட ஆங்கிலம், கணிதத் திறனறிதல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக செவ்வாய்க்கிழமை உடல்தகுதி தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்பட உள்ளன. இதில் தகுதிபெறுவோர் விமானப் படைக்கு தேர்வு செய்யப்படுவர்.
    இதுகுறித்து விமானப்படை விங் கமாண்டர் எஸ்.எஸ். நாயர் கூறியது: இதுவரை தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5,000 இளைஞர்கள் விமானப் படை ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்றுள்ளனர். மே 23-ஆம் தேதி வரை இவர்களுக்கு எழுத்துத் தேர்வு, உளவியல், நேர்முக, குழு விவாதம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai