சுடச்சுட

  

  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திங்கள்கிழமை அதிகாலை ரயிலில் அடிபட்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார்.
  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வடுகபட்டியைச் சேர்ந்தவர் குழந்தைராசு. இவர் திருச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் லோடுமேனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பாத்திமா ரோசாலி என்ற மனைவியும், இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பாத்திமா ரோசாலி கடந்த 2009-ஆம் முதல் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் குழந்தைராசு பால் வாங்குவதற்காக எழுந்துள்ளார். அப்போது அருகில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி பாத்திமா ரோசாலியை காணாததை கண்டு அவரை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார்.
  அப்போது அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு பெண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு கிடந்த உடைகளை வைத்து அது பாத்திமா ரோசாலி என உறுதி செய்யப்பட்டது. திருச்சி ரயில்வே புறக்காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் சடலத்தை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai