Enable Javscript for better performance
கல்வி மேம்பாட்டுக்கான தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது: மத்திய  இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்- Dinamani

சுடச்சுட

    

    கல்வி மேம்பாட்டுக்கான தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது: மத்திய  இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

    By DIN  |   Published on : 24th May 2017 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்வி மேம்பாட்டுக்காக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றார் மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
    திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த தின விழாவில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை வந்த அவர், செய்தியாளர்களிடம்
    கூறியது:
    திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தாமதம் ஆவதற்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி தராததே காரணம்.
    விமானப்படை தேர்வை தமிழில் எழுதுவதற்கு தேவைப்படும்போது நடவடிக்கை
    எடுக்கப்படும்.
    தமிழகத்தில் மொழியைச் சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள்தான், தமிழ் தெரியாத தலைமுறையை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர்கள். முதலில் தமிழக பள்ளிகளில் தமிழ் படிப்பதை கட்டாயப்படுத்துங்கள். அதன் பிறகு மொழி குறித்து பேசலாம். தமிழகத்தில் 2 ஆயிரம் பள்ளிகள் மூடப்படுவதைத் தடுக்க வேண்டும். எந்த மாநில அரசையும் மத்திய அரசு கலைக்காது என்றார் அவர்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai