சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உபகோயிலாக விளங்கும் இனாம் சமயபுரம்   ஆதி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
    சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உபகோயிலாக விளங்குவது இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில். இந்த கோயிலிலிருந்துதான் தற்போது உள்ள இடத்துக்கு சமயபுரம் மாரியம்மன் சென்றதாக ஐதீகம்.சமயபுரம் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவின் 8-ஆம் நாளில் மாரியம்மன்  இக்கோயிலில் எழுந்தருளுவார். இதை மையமாகக் கொண்டு, பழைய கோயிலை புதுப்பித்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    ஆதிமாரியம்மன், விநாயகர், தண்டபாணி, நாககன்னியம்மன், வெக்காளியம்மன் மற்றும் கருப்பண்ணசுவாமி சன்னதிகளில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டன.
    இதைத்தொடர்ந்து இக்கோயிலில் ஜூன் 1-ஆம் தேதி குடமுழுக்குப் விழா நடைபெறுகிறது.மே 29-ல் யாகசாலை பூஜைகள் தொடக்கம்: விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமத்துடன் மே 29ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. மாலையில் வாஸ்துசாந்தி, ரக்க்ஷாக்ண ஹோமம், தீபாராதனை நடைபெறுகிறது. மே 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு முதல் கால யாகா சாலை பூஜைகள் நடைபெறுகின்றன.
    மே 31ஆம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும்,  ஜூன் 1-ஆம் தேதி காலை 5 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகின்றன. காலை 6.45 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனையும், காலை 7.15 மணிக்கு கடங்கள் புறப்பாடும்,  காலை 7.45 மணிக்கு ஆதிமாரியம்மன் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது.
    காலை 8.15 மணிக்கு மூலவர் மகா குடமுழுக்கு மற்றும் தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறும். மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மகா அபிஷேகம், தீபாராதனையும், ஆதிமாரியம்மன் வீதியுலா வருதலும் நடைபெறும்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai