சுடச்சுட

    

    ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் காஸ் சிலிண்டர் விநியோகம்: விழிப்புணர்வை ஏற்படுத்த இண்டேன் நிறுவனம் தீவிரம்

    By DIN  |   Published on : 24th May 2017 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் வாடிக்கையாளர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்துகிறது இண்டேன் நிறுவனம். இதுகுறித்து தனது விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை தொடங்கியுள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
    மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தற்போது ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் சமையல் காஸ் சிலிண்டர் விநியோகத்தையும் மேற்கொள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இண்டேன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தனது விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வை திருச்சி வட்டார அலுவலகம் செவ்வாய்க்கிழமை திருச்சியில் நடத்தியது. நிறுவனத்தின் பொது மேலாளர் (எல்பிஜி) எல்.கே.எஸ். சௌஹான் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து பேசினார்.
    விழிப்புணர்வு நிகழ்வு குறித்து இண்டேன் முதுநிலை வட்டார மேலாளர் (திருச்சி) என். ரவிசங்கர் செய்தியாளர்களிடம் கூறியது:
    இண்டேன் நிறுவனம் தனது விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்களுக்கு ரொக்கமில்லா பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. திருச்சி வட்டாரத்தின் கீழ் உள்ள 10 மாவட்டங்களில் 23 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
    ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பிம் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும். இந்த செயலிலிருந்து வாடிக்கையாளர்களின் கணக்கு  வைத்துள்ள வங்கிகளிலிருந்து காஸ் சிலிண்டருக்குரிய தொகை வரவு வைத்துக் கொள்ளப்படும்.
    காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்கள் இதற்காக ஸ்வைப் இயந்திரம் போன்றவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்பது தேவையில்லை. பிம் செயலியை பதிவிறக்கம் செய்தாலே போதும். எளிதாக ரொக்கமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
    மற்றொரு வசதி : ஏஇபிஎஸ் எனப்படும் ஆதார் எனேபிள்டு டிஜிட்டல் சிஸ்டம் என்ற முறையிலும் சமையல் காஸ் சிலிண்டரை விநியோகம் செய்யும் திட்டத்தை இண்டேன் அறிமுகப்படுத்துகிறது. தற்போது வங்கிக் கணக்கு எண்ணோடு ஆதார் இணைக்கப்பட்டிருப்பதால்  சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் சமையல் காஸ் சிலிண்டருக்குரிய மானியத் தொகை வரவு வைக்கப்படுகிறது.

     

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai