Enable Javscript for better performance
கொள்ளிடம், காவிரியில் தடுப்பணைகள், கதவணைகள் கட்ட வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கொள்ளிடம், காவிரியில் தடுப்பணைகள், கதவணைகள் கட்ட வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 25th May 2017 05:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருங்காலங்களில் வறட்சி ஏற்படாமல் இருக்க கொள்ளிடம், காவிரியாற்றில் தடுப்பணைகள், கதவணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறையின் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் பழனிகுமாரிடம் த.மா.கா. விவசாய அணித் தலைவர் புலியூர் நாகராஜன், நிர்வாகிகள் ராஜேந்திரன் உள்ளிட்டோர் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:
    கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது நிலவிவருகிறது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற வறட்சி ஏற்படாமல் இருக்க நீர்சேமிப்புத் திட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். காவிரியில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்துள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு தடுப்பணைகள் கட்ட வேண்டும். மேலும், கொள்ளிடம், காவிரியாற்றில் 20-க்கும் மேற்பட்ட கதவணைகள், தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
    குடிமராமத்துப் பணிகளை ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்வதை கைவிட்டு, அந்தந்தப் பகுதிகளின் விவசாயிகளின் ஒத்துழைப்போடு மேற்கொள்ள வேண்டும். மாநிலத்திலுள்ள ஏரி, குளங்களைத் தூர்வாருவதோடு, அதற்கான வரத்து வாரிகளையும் தூர்வார வேண்டும்.
    பழைய கட்டளை மேட்டு வாய்க்காலை புனரமைக்கத் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டாலும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே திட்டத்துக்கு நிதி ஒதுக்கிட்டு பணிகளைத் தொடங்க வேண்டும், நதிகள் இணைப்புத் திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai