சுடச்சுட

  

  திரைத்துறையில் சாதிக்க தேடலும், கருத்தும் முக்கியமானது என்றார் திரைப்பட இயக்குநர் ராமு செல்லப்பா.
    நிழல் அமைப்பு, பதியம், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய குறும்படப் பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரிப் பொருளாளர் எஸ். ஐசய்யா தலைமை வகித்தார்.
    விழாவில் திரைப்பட இயக்குநர் ராமு செல்லப்பா பேசியது: சென்னையில் மட்டும்தான் சினிமா எடுக்க முடியும் என்ற நிலை மாறி திருச்சி, கன்னியாகுமரி, கோவை என மற்ற பகுதிகளிலும் சினிமா எடுக்கப்படுகிறது.
    தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. நாம் சொல்ல வருகின்ற கருத்துவடிவம்தான் முக்கியம். இந்த பயிற்சிப் பட்டறையோடு உங்கள் பணி முடிந்துவிட்டது எனக் கருதாமல் தொடர்ந்து குறும்படங்களை எடுத்து பழகுங்கள். நிறைய திரைப்படங்கள் பாருங்கள், நிறைய புத்தகங்களைப் படியுங்கள். அப்போதுதான் புதிய எண்ணங்கள் மனதில் உருவாகும்.
    உதவி இயக்குநராக சேருவதாக இருந்தால்கூட இயக்குநரிடம் உங்களின் தனித்திறமைகளை எடுத்துக் காட்ட வேண்டும். அது மற்றவர்களிடமிருந்து உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டும். உங்களுக்கு கருத்தும், தேடலும் முக்கியம் தேவை.
  சினிமா குறித்து தொடர்ந்து பேசி கொண்டே இருங்கள். நீங்கள் நினைத்த கருத்தை மற்றொருவர் வேறுவகையாக சிந்திக்கலாம். அதிலிருந்து கூட உங்களுக்கு புதிய வடிவம் உருவாகலாம் என்றார். அதைதொடர்ந்து பயிற்சி பெற்று, குறும்படங்களைத் தயாரித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
    கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய பயிற்சியில் கேமரா பயன்படுத்தும் முறை, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு, ஒப்பனை உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி குறித்து நிழல் அமைப்பின் நிறுவனர் திருநாவுக்கரசு பேசினார்.       
   நிகழ்ச்சியில், கல்லூரித் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியரும், பயிற்சி ஒருங்கிணைப்பாளருமான எம்.ராஜசேகரன், கலைப்புல முதன்மையர் ஞானராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai