சுடச்சுட

  

  வறட்சி நிவாரணம்: 10 மாநிலங்களில் தமிழகத்துக்கு அதிகளவில் ஒதுக்கீடு: வருவாய்த் துறை அமைச்சர் தகவல்

  By DIN  |   Published on : 27th May 2017 06:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்ட 10 மாநிலங்களில் தமிழகத்துக்குத்தான் மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
    திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வறட்சி நிவாரணம், குடிநீர் விநியோகம் மற்றும் வருவாய்த் துறை சார்ந்த 4 மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அதனை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
  வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், பயிர்க் காப்பீடு, இடுபொருள் மானியம் உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழகத்துக்கு நிவாரண நிதியாக ரூ. 1,472 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த தொகை 10 மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையைவிட அதிகமானது. தமிழகத்தில் நிகழாண்டில் நிலவரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
    பேட்டியின்போது, பி.ரத்தினவேல், மாவட்ட ஆட்சியர்கள் கே.எஸ். பழனிசாமி (திருச்சி),டி.பி.ராஜேஷ் (கடலூர்), எல். நிர்மல்ராஜ்(திருவாரூர்). அண்ணாதுரை (தஞ்சாவூர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai