Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 28th May 2017 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தின் வாழ்வாதாரமான விவசாயிகளின் பிரச்னையை கருத்தில் கொண்டு மத்திய அரசு காலம்தாழ்த்தாது உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் திருச்சி டி. குணா தலைமை வகித்தார். துணைத் தலைவர் சமுத்திரம் வி. கணேஷ், எஸ்.பி. ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
    தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி ஏக்கருக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மருத்துவ மேற்படிப்புக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இருப்பதில்லை. இதனால், கர்ப்பிணி பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, இரவு நேரங்களில் மகப்பேறு மருத்துவர்
    களைப் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.எல்.ஏ. சிதம்பரம் சிறப்புரையாற்றினார். முன்னதாக மாநில விவசாய அணித் தலைவர் புலியூர் ஏ. நாகராஜன் வரவேற்றார். திருவெறும்பூர் வட்டாரத் தலைவர் எஸ்.எம். சக்திவேல் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai