சுடச்சுட

    

    மணப்பாறை அருகே  கே.புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 9 பேர் காயம்

    By DIN  |   Published on : 28th May 2017 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியம், கே.புதுக்கோட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 வீரர்கள் காயமடைந்தனர்.
    ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு போட்டியை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் ராஜராஜன் தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளைகளும், பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 285 காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன.
    மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு 119 வீரர்கள் களம் இறங்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளருக்கும் தென்னங்கன்று, வெள்ளிக்காசு, ரொக்கம், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.
    மாடுகள் முட்டியதில் காயமடைந்த 9 வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை காண சுமார் மூன்றாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சியில், மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சந்திரசேகர், வட்டாட்சியர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai