சுடச்சுட

  

  தமிழகத்தில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்தவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

  By DIN  |   Published on : 29th May 2017 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்தவில்லை என்றார் தமிழிசை செளந்தரராஜன்.
   திருச்சி திருவானைக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராமானுஜரின் 1000-ஆவது ஜயந்தி விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
   ஆயிரமாண்டுகளுக்கு முன்பு சமூக நீதியை நிலைநிறுத்தியவர் ராமானுஜர். ஸ்ரீரங்கம் கோயிலில் ஊழலை ஒழித்தவர். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை முன்னிறுத்தியவர். தமிழில் வழிபாடு நடத்தி, திருத்தொண்டர்கள் பலரை உருவாக்கிய ராமானுஜரின் 1000-ஆவது ஜயந்தி விழாவை கொண்டாடுவதில் பெருமைபடுகிறோம்.
   தமிழக அரசியல் கட்சிகள் கீழடியை வைத்து, பாஜக தமிழ் கலாசாரத்திற்கு எதிரானவர்கள் போல சித்தரித்து அரசியல் செய்தன. தற்போது கீழடியில் அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் தமிழ் கலாசாரத்தை தூக்கி பிடிப்பதில் பாஜக எந்த வகையிலும் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளோம்.
   பாஜக தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக, பாஜக தமிழகத்தில் பலம் பெற்று வருகிறது.
   ஊழலில் திளைத்த கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் பல கோடி சுருட்டப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை. குறிப்பாக, நேரடி மானியங்களை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் ரூ. 50,000 கோடி மக்களின் வரிப்பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் திருநாவுக்கரசர் பாஜக ஆட்சியில் பணம் சுருட்டப்பட்டுள்ளதாக கூறுவதைப் பார்க்கும் போது அவர், கணக்குத் தெரியாமல் பேசுகிறார் எனத் தெரிகிறது என்றார் தமிழிசை.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai