சுடச்சுட

    

    மாட்டிறைச்சி தடையை கண்டித்து போராட்டம்: தமுமுகவினர் 96 பேர் கைது

    By DIN  |   Published on : 30th May 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாட்டிறைச்சி தடையைக் கண்டித்து திருச்சியில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 96 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    வயது குறைந்த மாடுகளை வெட்டி, மாட்டிறைச்சி விற்க மத்திய அரசு அண்மையில் தடைவிதித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
    இந்நிலையில், மாட்டிறைச்சிக்கு தடைவிதித்த மத்திய அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் திருச்சியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால், ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.
    இந்நிலையில், அறிவித்தபடி போலீஸாரின் தடையை மீறி மாவட்டச் செயலாளர் உதுமான் அலி தலைமையில் தமுமுகவினர் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் திரண்டு, சாலையை ஆக்கிரமித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாட்டிறைச்சியை பொதுமக்களுக்கு விநியோகிக்க முயன்றனர். இதை போலீஸார் தடுத்ததால், இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தமுமுகவினர் மாட்டிறைச்சியை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பிரதமரின் உருவபொம்மை, பாஜகவின் கொடியை போராட்டத்தில் சிலர் எரிக்க முயன்றனர். அவற்றையும் போலீஸார் பறித்ததால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 96 பேரை போலீஸார் கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai