சுடச்சுட

  

  தோகைமலை அருகே கதண்டு கடித்ததில் 14 பேர் மருத்துவமனையில் அனுமதி

  By DIN  |   Published on : 31st May 2017 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தோகைமலை அருகே கதண்டு கடித்ததில் 14 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தளிஞ்சி கிராமத்தில் ராஜூ என்பவருக்குச் சொந்தமான மரவள்ளிக்கிழங்கு வயலிலில் செவ்வாய்க்கிழமை காலை 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அருகிலிருந்த புளியமரத்தில் இருந்த கதண்டுகள் தொழிலாளர்களை கொட்டியது.
    இதில், அதே பகுதியைச் சேர்ந்த ராமன் (48), இவரது மனைவி பானுமதி (40), வைராயி (72), வள்ளி (50), கோவிந்தராஜு (42) உள்ளிட்ட 14 பேர் காயமடைந்தனர்.
    இவர்களை அருகிலிருந்த உறவினர்கள் மீட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு, மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.   அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
   தளிஞ்சி பகுதியில் உள்ள கதண்டுகள் குடியிருக்கும் கூட்டை மாவட்ட வனத்துறையினர் அகற்றி, பொதுமக்களை காக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai