சுடச்சுட

  

  வறட்சிக்கு இயற்கை மட்டுமல்ல, மனிதனும் தான் காரணம்  என்றார் ராஜஸ்தான் மாநிலத்தின் நதிநீர் வளம் மீட்பு இயக்கத்தின் தலைவர் ராஜேந்திரசிங்.
    திருச்சியில் தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தாய்வுக் கூட்டத்துக்கு தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் குருசாமி தலைமை வகித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயப் பிரிவுத் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில நதிநீர் வளம் மீட்பு இயக்கத் தலைவர் ராஜேந்திர சிங் பேசியது: காவிரி நீர்ப் பிரச்னை, மணல் பிரச்னைக்காக எங்கள் இயக்கம் சார்பில் அனைத்து விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து பொது விசாரணைக் குழுவை அமைத்து நடவடிக்கை மேற்கொள்வோம். விவசாயப் பிரச்னை தொடர்பாக அனைத்துத் தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டறிந்து மத்திய, மாநில அரசுகளிடம் அறிக்கையை சமர்ப்பிப்போம் என்றார் ராஜேந்திரசிங்.
   பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விவசாயிகள் தண்ணீர் தேவை குறைந்த பயிர்களை பயிரிட வேண்டும். வடமாநிலங்களில் காவிரி டெல்டா பகுதிகள் கடவுளின் தரிசனம் பெற்ற பகுதிகள் என்பார்கள். ஆனால், தற்போது அந்த பகுதியே வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இயற்கை மட்டுமல்ல, மனிதனும் ஒரு காரணம் என்றார்.
  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் ஆறுகள் மோசமான நிலையில் சீரழிந்து வரும் நிலையை மக்களிடம் சுட்டிக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி நீரை சேமிக்க வலியுறுத்துவது, சரியான நீர் மேலாண்மைக் கொள்கையை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில், காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் மகாதானபுரம் வி.ராஜாராம், பொதுச் செயலர் காந்திபித்தன், புரவலர் தீட்சிதர் பாலசுப்பிரமணியன், தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொ. அய்யாக்கண்ணு, அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் நல்லசாமி, ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் வையாபுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai