சுடச்சுட

  

  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் வியாழக்கிழமை (ஜூன் 1) ஸ்ரீநம்பெருமாள் வசந்த உற்சவ விழா தொடங்குகிறது.
    ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் ஸ்ரீநம்பெருமாளுக்கு வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த உற்சவ விழா வியாழக்கிழமை தொடங்கி ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் தினமும் ஸ்ரீநம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்தை அடைவார்.
    பின்னர், அலங்காரம் அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அப்போது, மண்டபத்தை சுற்றிலும் நிரப்பி வைக்கப்பட்டுள்ள குளிர்ந்த நீரில் செயற்கை தாமரை மிதக்கவிடப்பட்டு வெற்றி வேர் மண்டபத்தில் உபய நாச்சியார்களுடன் ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருளுவார்.
    இந்த மண்டபத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜூன் 7 ஆம் தேதி நெல்லளவு கண்டருளுதல் நடைபெறவுள்ளது. ஜூன் 9 ஆம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.  விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் செய்து வருகிறார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai