Enable Javscript for better performance
"தமிழகத்திலும் விவசாயிகள்  நலவாரியம் தேவை'- Dinamani

சுடச்சுட

    

    கேரளத்தைப் போல தமிழகத்திலும் விவசாயிகள் நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்துக்கு   மாவட்டத் தலைவர் ம. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அயிலை. சிவசூரியன்  நடைபெற்ற பணிகள்,எதிர்காலப் பணிகள் குறித்துப் பேசினார்.
    இந்திய கம்யூனிஸ்ட் புறநகர் மாவட்டச் செயலர் கணேசன், சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பழனிசாமி, நிர்வாகிகள் அன்பில் சுப்பிரமணியன், லால்குடி சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.
    கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ. 1 முதல் 5 வரை தில்லியில் நடைபெறும் அகில இந்திய விவசாயிகள் தொடர் முழக்கப் போராட்டத்தில் அதிகளவில் விவசாயிகளை பங்கேற்கச் செய்வது, விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாத்திடும் வகையில் கேரள அரசை போல தமிழகத்திலும் விவசாயிகள் நலவாரியம் அமைக்க வேண்டும்.
     கூட்டுறவுத் துறையும்,  வருவாய்த் துறையும் முறையாகச் செயல்பட்டு சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு பாகுபாடின்றி உரிய கடன் வழங்க வேண்டும். 2016-17  ஆண்டில் பிரதமர் பயிர்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 10 மாதமாகியும் இழப்பீடு வழங்கப்படாமல், பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள் இழுத்தடித்து வருகின்றன. கடந்தாண்டு இழப்பீடு வழங்காத நிலையில், நிகழாண்டுக்கான காப்பீட்டுத் தொகை பிரீமியத்தை செலுத்துமாறு விவசாயிகளை வலியுறுத்தி வருகின்றனர்.
    இழப்பீடு வழங்காமல் ஏமாற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்,  பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்ய வேண்டும்.
    தண்ணீர் திறந்து 15 நாள்களுக்கு மேலாகியும் திருச்சி மாவட்ட பாசன கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் தண்ணீர் செல்லாமல் விவசாய பணி தொடங்கப்படாமல் உள்ளது. அனைத்துப் பாசனக் கால்வாய்களிலும் கூடுதலாக தண்ணீர் திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai