திருச்சி நகரில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.9) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி நகரிய மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட திருச்சி மாநகராட்சி அலுவலகம் முதல் குட்ஷெட் சாலை வரையில் உள்ள மின்பாதைகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
வில்லியம்ஸ் சாலை, பிராமினேட் சாலை, வார்னர்ஸ் சாலை, பறவைகள் சாலை, கலைக்காவேரி சாலை, கண்டித்தெரு, மார்சிங்பேட்டை, கூனிபஜார், ஒத்தக்கடை, பிஎஸ்என்எல் அலுவலகம், தலைமை தபால்நிலையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நகரிய செயற்பொறியாளர் ராஜேந்திரவிஜய் தெரிவித்துள்ளார்.