மாதாந்திர மின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக திருவானைக்கா மற்றும் திருச்சி மாநகரின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ( ஆக.7) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் ஜி. சேகர், தென்னூர் நகரியச் செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் ஆகியோர் திங்கள்கிழமை தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவானைக்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இங்கிருந்து விநியோகம் பெறும் திருவானைக்கா கோயில் சன்னதி, வடக்கு , தெற்கு உள்வீதிகள், ஒத்தத்தெரு, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கர் நகர், பஞ்சக்கரை சாலை, அருள்முருகன் கார்டன், ஏ.யு.டி. நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி சாலை, டிரங்க் சாலை, கும்பகோணத்தான் சாலை, சிவராம் நகர், மேலக்கொண்டையம்பேட்டை, சென்னை புறவழிச்சாலை, கல்லணை சாலை, கீழ, நடுக்கொண்டையம்பேட்டை, ஜம்புகேசுவரா நகர், அகிலாண்டேசுவரி நகர், வெங்கடேசவரா நகர், தாகூர்தெரு, திருவெண்ணெய்நல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம் , உத்தமர்சீலி, கிளிக்கூடு, நெ.1. டோல்கேட், பிச்சாண்டார்கோயில், மாருதி நகர், கோகுலம்காலனி, வி.என்.நகர், ராஜா நகர், ஆனந்த் நகர், ராயர் தோப்பு, தாளக்குடி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதுபோல, திருச்சி நகரியத்துக்குள்பட்ட நீதிமன்றம், எம்.ஜி.ஆர்.சிலை முதல் தலைமை அஞ்சல் அலுவலகம் வரையிலான மின் பாதைகளில் மேம்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், வில்லியம்ஸ் சாலை, பிராமினேட் சாலை, வார்னர்ஸ் சாலை, கண்டோன்மென்ட் பகுதிகள், கண்டித்தெரு, வண்ணாரப்பேட்டை, கஸ்தூரிபுரம், புத்தூர், ஹீபர் சாலை, அரசு பொது மருத்துவமனை, புத்தூர் ஆபீசர் காலனி, மார்சிங்பேட்டை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.