திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ளஆங்கரை கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் திறன் வளர்ப்பு பயிற்சி திங்கள் கிழமை தொடங்கியது.
லால்குடி அருகேயுள்ள ஆங்கரை கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை மகேந்திரா பிரைடு பள்ளி நிறுவனம் சார்பில் 11 ஆம் தேதி வரை திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி முகாமின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சியினை கூட்டுறவு சங்கங்களின் திருச்சி மண்டல இணை பதிவாளர் கே.சி. ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து பல்வேறு துறைகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி அவர் மேலும் பேசியது:
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கல்லூரிக்கு விரைவில் ஆய்வு செய்யவுள்ளார். அன்றைய தினம் லால்குடி பகுதியில் உள்ள சிவஞானம் சொசைட்டியில் ரூ. 20 லட்சம் செலவில் அமைந்துள்ள விதை சுத்திகரிப்பு மையம் மற்றும் பயிர் பதப்படுத்தும் மையம் ஆகியவற்றை இம்மாத இறுதியில் திறந்து வைக்கவுள்ளார் என்றார்.
விழாவில், கல்லூரி முதல்வர் சின்னசாமி, லால்குடி சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சித்ரா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் எம். ஜூசஸ் விக்டர் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.