திருச்சியில் வங்கிக் கணக்கில் ரூ. 40 ஆயிரம் நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி சிந்தாமணி காயிதேமில்லத் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாகூர்கனி மனைவி ரசிதாபீபி. இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில் அவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ. 40,000 எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதுகுறித்து அவர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் சென்று புகார் தெரிவித்தார். அதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், ஓசூரில் உள்ள ஏடிஎம் மையத்திலிருந்து போலி ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி ரூ,.40,000 எடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.